கேரட் இலை வறுவல்
தேவையான பொருட்கள்:
கேரட் இலை - தேவையானளவு(சிறிதாக வெட்டியது)
உப்பு - தேவையானளவு
வெங்காயம் - தேவையானளவு(சிறிதாக வெட்டியது)
உள்ளி(பூண்டு) - ஒரு பல் (சிறிதாக வெட்டியது)
தேசிக்காய்ச்சாறு(லைம்(லெமன்)ஜூஸ்) - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - தேவையான அளவு (சிறிதாக வெட்டியது)
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - தேவையான அளவு
செய்முறை:
சிறிதாக வெட்டிய கேரட் இலைகளை கழுவி வைக்கவும். தாட்சியில்(வானலியில்)எண்ணெய் விட்டு அது கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம், உள்ளி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில் சிறிதாக வெட்டிய கேரட் இலைகளை போட வேண்டும். ஒரளவு தாளித்த பின்பு தேங்காய்ப்பூ ,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
அதன் பின்பு தேசிக்காய்ச்சாறு (லைம்(லெமன்)ஜூஸ்) சேர்த்து கலக்க வேண்டும்
எல்லாம் கலந்த பின்பு 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்து பின்பு இறக்கி பரிமாறவும்.
குறிப்புகள்:
உடல்சுருக்கம் மறைய, இன்சுலின் சுரக்க, கண் பார்வை பிரகாசமாக தெரியவும், வறண்ட சருமம் மறைய இதில் கால்சியம், உயிர்ச்சத்து (வைட்டமின்) ஏ, டி ,ஈ காணப்படுகிறது. இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ண வேண்டும்.