கூர்கட் காளான் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

கூர்கட் - 2

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

வெங்காயம் -1

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

மல்லி பவுடர் - 1 டீஸ்பூன்

சீரகப்பவுடர் - 1 டீஸ்பூன்

புளிக்காத தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

மல்லி இலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

கூர்கட் வட்டமாக கட் செய்து வைக்கவும். காளான், வெங்காயம், மல்லி இலை கட் செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் இளஞ்சிவப்பாக வதக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து மல்லி, சீரகம், சில்லி பவுடர்களை போட்டு வதக்கவும்.

பின்பு காளான், கூர்கட் சேர்த்து பிரட்டி, உப்பு சேர்த்து 5-10 நிமிடம் வேகவிடவும். சிறிது தண்ணீர் தெளிக்கவும்.

கூர்கட், காளான் வெந்தவுடன் தயிர் சேர்க்கவும். மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான கூர்கட் காளான் கறி ரெடி. இதனை ரைஸ், சப்பாத்தியுடன் பரிமாறலாம்.

குறிப்புகள்: