குஸ் குஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குஸ் குஸ் - 2 கப் பட்டர் - 2 தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 3 குடைமிளகாய் - ஒன்று கேரட் - ஒன்று பீன்ஸ் - சிறிதளவு எண்ணெய் - தேவையான அள்வு சுடுதண்ணீர் - 2 கப்

செய்முறை:

குஸ்குஸுடன் பட்டர்

ஒரு தேக்கரண்டி எண்ணெய்

தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

பின்னர் அதில் நன்கு கொதித்த சுடு தண்ணீரை ஊற்றி மூடி 5 நிமிடம் வைத்திருக்கவும்.

5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கிளறி விடவும். கிளறாமல் விட்டால் குழைந்து விடும்.

குடைமிளகாய்

பச்சை மிளகாய்

கேரட்

பீன்ஸ்

வெங்காயம் எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு வெங்காயம்

பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்

அதன் பிறகு நறுக்கி வைத்திருக்கும் குடைமிளகாய்

பீன்ஸ்

கேரட் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் சேர்ந்து நன்கு வதங்கியதும் வெந்த குஸ் குஸ் சேர்த்து கிளறவும்.

சுவையான குஸ் குஸ் ரெடி. சாம்பாருடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்புகள்: