குஸ்குஸ் புட்டு
0
தேவையான பொருட்கள்:
குஸ்குஸ் - ஒரு கப் வறுத்த அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி துருவிய வெல்லம் - 2 மேசைக்கரண்டி தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை வெந்நீர் - 2 கப்
செய்முறை:
தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் குஸ்குஸுடன் வெந்நீரை ஊற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
குஸ்குஸ் ஊறியதும் அதனுடன் வறுத்த அரிசி மாவு
தேங்காய்ப் பூ மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். (வெந்நீரில் ஊற வைப்பதால் குஸ்குஸ் நன்றாக ஊறியிருக்கும்).
கலந்து வைத்துள்ள குஸ்குஸ் கலவையை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
வெந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே வெல்லம் சேர்த்து கிளறிவிட்டு பரிமாறவும்.
சுவையான குஸ்குஸ் (Couscous) புட்டு தயார்.