குவாக்கமொலே

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவகாடோ - 2 எலுமிச்சை சாறு - 5 தேக்கரண்டி கல் உப்பு - தேவையான அளவு மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி சீரகத் தூள் - அரை தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று தக்காளி - 4 (சிறியது) கொத்தமல்லித் தழை - ஒரு மேசைக்கரண்டி பூண்டு - 3 பற்கள்

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

வெங்காயம்

தக்காளி

பூண்டு மற்றும் கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும். (தக்காளியை விதையுடன் சேர்க்கக்கூடாது).

அவகாடோவைப் பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் விதையை எடுக்கவும்

பிறகு அவகாடோவின் சதைப் பகுதியை சிறிய கரண்டியை வைத்து சுரண்டி எடுக்கவும். அதனுடன் பாதி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பிசையவும்.

அத்துடன் உப்பு

மிளகாய்த் தூள் மற்றும் சீரகத் தூள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு நறுக்கிய வெங்காயம்

தக்காளி

பூண்டு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்துக் கிளறவும். (அதிகம் பிசைந்துவிடக் கூடாது). கடைசியாக மீதமுள்ள எலுமிச்சை சாறைச் சேர்த்துக் கிளறி

ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு பரிமாறவும்.

சுவையான குவாக்கமோலே ரெடி.

குறிப்புகள்: