குழந்தைகள் ப்ரெட் சிக்கன் சாண்ட்விச் (2)
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 12 துண்டு
சிக்கன் - நூறு கிராம் எலும்பில்லாதது
லெட்டியூஸ் இலைகள் - அரை கப்
வெள்ளை மிளகு தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
மையானஸ் - ப்ரெட்டில் தேய்க்க தேவையான அளவு
செய்முறை:
சிக்கனை பொடியாக நறுக்கி அதில் உப்பு, வெள்ளை மிளகு தூள், சோயா சாஸ், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் இல்லாமல் வடித்து துருவிக் கொள்ளவும்.
லெட்டியூஸையும் துருவிக்கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக சேர்க்கவும்.
ப்ரெட்டில் ஒரங்களை கட் பண்ணி எடுத்து விட்டு இரண்டு பக்கமும் மையானஸை தடவி கலக்கி வைத்துள்ள சிக்கன் லெட்டியூஸ் கலவையை பரவினால் போல வைத்து தேவைப்பட்டால் கொஞ்சம் டொமேட்டோ கெட்சப்பும் தெளித்து இரண்டு ப்ரெட்டை ஒன்றோடு ஒன்று மூடி லேசாக அழுத்தி முக்கோண வடிவில் கட் பண்ணி உங்கள் செல்ல குழந்தைகளுக்கு கொடுத்தனுப்புங்கள்.
குறிப்புகள்:
இதை உங்கள் குழந்தை கொண்டு போனால் அடுத்த முறை உங்கள் கொத்தமல்லி இலை போடுங்கள், வெள்ளை மிளகு தூளுக்கு பதில் கருப்பு மிளகு தூளும் போடலாம்.