குளுக்கோரஸ்
தேவையான பொருட்கள்:
சீனி - 250 கிராம்
ஜெலற்றீன் - 25 கிராம்
லிக்விட் குளுக்கோஸ் - 75 கிராம்
சித்திரிக்கமிலம் - அரை தேக்கரண்டி(2 கிராம்)
எசன்ஸ்(விரும்பியது) - 5 துளிகள்
கலரிங் (விரும்பியது) - 5 துளிகள்
தண்ணீர் - ஒரு டம்ளர்
சீனி - 100 கிராம்
மாஜரீன் (தட்டுக்கு பூச) - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கப்பில் ஜெலற்றீனை போட்டு அதனுடன் நன்கு கொதித்த தண்ணீர் 10 மேசைக்கரண்டி (அரை டம்ளர்) விடவும்.
அதன் பின்பு அதை நன்றாக கொதித்த தண்ணீரை உள்ள இன்னொரு பாத்திரத்தில் அமிழ்த்தி வைத்து கொண்டு ஜெலெற்றீன் முற்றாக கரையும் வரை நன்றாக கரைத்து அப்படியே கொதி நீர் உள்ள பாத்திரத்தினுள் வைக்கவும்.
அடுப்பில் தாட்சியை வைத்து சூடாக்கி அதில் சீனியை போட்டு அதனுடன் தண்ணீர் (அரை டம்ளர்) விட்டு காய்ச்சவும்.
சீனி முழுவதும் கரைந்ததும் லிக்விட் குளுக்கோஸ் ஒன்றாக சேர்த்து 250°f இல் வெப்பமாக்கி அடுப்பிலிருந்து இறக்கி உடனே சித்திரிக்கமிலம் கலந்து நன்றாக ஆறவிடவும்.
ஆறிய பின்பு கலரிங், எசன்ஸ் என்பன சேர்க்கவும். அச்சுக்களில் பட்டர் பூசவும்.
பின்பு பட்டர் பூசிய அச்சுக்களில் ஊற்றி 8 மணித்தியாலத்திற்குப் பதமாகும் வரை வைத்து கத்தியால் தட்டி எடுத்து சீனியில் பிரட்டி எடுத்து அதிகமான சீனியை அகற்றிய பின்பு பொதி செய்க. அதன் பின்பு அதை எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
சிறுவர் முதல் பெரியவர் வரை இலகுவாக உண்ண கூடியதும் சுவையானதுமான இனிப்பு குளுக்கோரஸ் ஆகும். அத்துடன் இது இலங்கை மக்கள் மிக மிக விரும்பி உண்ணும் இன்னொரு இனிப்பு வகையாகும்.
எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - சீனி முழுவதும் கரைந்ததும் லிக்விட் குளுக்கோஸ் ஒன்றாக சேர்த்து 250°f இல் வெப்பமாக்கி அடுப்பிலிருந்து இறக்கி உடனே சித்திரிக்கமிலம் கலந்து நன்றாக ஆறவிடவும். பட்டர் பூசிய அச்சுக்களில் ஊற்றி 8 மணித்தியாலத்திற்குப் பதமாகும் வரை வைத்து கத்தியால் தட்டி எடுத்து சீனியில் பிரட்டி எடுத்து அதிகமான சீனியை அகற்றிய பின்பு பொதி செய்க.