குல்லி பான் போகிபா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ரெட் துண்டுகள் - 10 பச்சை பட்டாணி வேக வைத்தது - சிறிது வெங்காயம் - ஒன்று கோஸ் - சிறிது கேரட் துருவியது - சிறிது உப்பு பச்சை மிளகாய் - 4 தேங்காய பால் - தேவைக்கு வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

ப்ரெட் துண்டுகளை சிறு துண்டுகளாக்கி அதில் தேங்காய் பால் விட்டு பிசைந்து ஊற விடவும். பட்டாணியை ஊற வைத்து உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பச்சை மிளகாய்

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பாதி வதங்கியதும் கோஸ்

துருவிய கேரட் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

கோஸ் வதங்கியதும் வேக வைத்த பட்டாணி சேர்த்து பிரட்டவும்.

இந்த காய்கறி கலவையை பிசைந்து வைத்த ப்ரெட் மாவில் கலந்து பொங்கல் பதத்தில் பிசையவும்.

நாண்ஸ்டிக் தவாவில் இந்த கலவையை பரப்பி மூடி போட்டு வேக விடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மூடியில் கவிழ்த்து எடுத்து அடுத்த பக்கம் திருப்பி விடவும்.

இரண்டு பக்கமும் சிவக்க வெந்ததும் எடுத்து துண்டுகளாக்கவும். சுவையான குல்லி பான் போகிபா தயார்.

குறிப்புகள்: