குலி காஜா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - ஒரு கப் அரிசி மாவு - ஒரு கப் எண்ணெய் - தேவைக்கு பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி அரைக்க: மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 2 பல் கறிவேப்பிலை - 10 இலைகள் பட்டை - ஒரு துண்டு ஏலக்காய் - 2 உப்பு - சிறிது

செய்முறை:

அரைக்க கொடுத்தவற்றை நீர் இல்லாமல் மிக்சியில் அரைக்கவும்.

பின் அதனுடன் சிறிது சிறிதாக நீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.

மைதா மற்றும் அரிசி மாவுடன்

2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து

நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து

மெல்லியதாக திரட்டி கொள்ளவும்.

திரட்டியதை தோசைக் கல்லில் இரண்டு பக்கமும் சில நொடிகள் போட்டு எடுக்கவும்.

பிறகு அதை டைமண்ட் வடிவில் வெட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

சுவையான குலி காஜா தயார்.

குறிப்புகள்: