குலா (Gulha)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. ஸ்மோக்டு டூனா / டூனா டின் - 1

2. வெங்காயம் - 1

3. பச்சை மிளகாய் - 2

4. தேங்காய் துருவல் - 1/2 கப்

5. இஞ்சி - 1 துண்டு

6. எலுமிச்சை சாறு - சிறிது

7. உப்பு

8. கறிவேப்பிலை

9. மஞ்சள் பொடி - சிறிது

10. எண்ணெய்

மேல் மாவுக்கு:

11. மைதா - 1 கப்

12. உப்பு

13. தேங்காய் துருவல் - சிறிது [விரும்பினால்]

செய்முறை:

மைதாவுடன் உப்பு சேர்த்து வெது வெதுப்பான நீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

டூனாவை உதிர்த்து கொண்டு அத்துடன் தேங்காய் துருவல், உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து பிசையவும்.

நன்றாக கலந்ததும் எலுமிச்சை சாறு கலந்து சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

மைதா மாவை சிறு வட்டங்களாக தேய்த்து உள்ளே இந்த மீன் உருண்டைகளை வைத்து உருட்டவும்.

இவற்றை சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான குலா தயார்.

குறிப்புகள்: