குலாய் அயாம் (இந்தோனேஷியன் சிக்கன் கிரேவி)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி - 1/2 கிலோ

உருளைக்கிழங்கு - 1

மிளகாய் வற்றல் - 8 (காரத்திற்கேற்ப)

மல்லி விதை - 3/4 மேசைக்கரண்டி

கேண்டில் நட்(candle nut) - 3 அல்லது முந்திரி பருப்பு - 3

பூண்டு - 3 பல்

சின்ன வெங்காயம் - 5

ஃப்ரெஷ் மஞ்சள் - 1" துண்டு( கிடைக்கவில்லையென்றால் 1/2தேக்கரண்டி மஞ்சள் தூள்)

இஞ்சி - 1" துண்டு

காலங்கல்(galangal root) - 2" துண்டு

லெமன் கிராஸ் - ஒன்று

சலாம் இலை - 4(கிடைக்காதவர்கள் தவிர்த்து விடலாம்)

கெட்டி தேங்காய் பால் - ஒரு கப்

இரண்டாம் தேங்காய் பால் - ஒன்றரை கப்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

சர்க்கரை(சீனி) - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து நடுத்தர அளவு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலை சிறிது சுடுத்தண்ணீரில் ஊற வைத்து அதனோடு மல்லி விதை, கேண்டில் நட் அல்லது முந்திரிப்பருப்பு, மஞ்சள், பூண்டு, இஞ்சி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

கேலங்கலை நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து லேசாக இடித்து(நசுக்கி) வைத்துக் கொள்ளவும்.

லெமன் கிராசின் அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அதையும் லேசாக இடித்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் அரைத்த மசாலா விழுது சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை அதிக தீயில் சுமார் 3 நிமிடங்கள் விடாமல் வதக்கவும்.

காலங்கால், லெமன் கிராஸ் மற்றும் சலாம் இலைகள் சேர்த்து வதக்கவும்.

இப்போது வெட்டிய கோழித்துண்டுகள், உப்பு, சர்க்கரை சேர்த்து 4 நிமிடங்கள் வதக்கவும்.

இரண்டாம் தேங்கய்ப்பால், கெட்டி தேங்காய்ப்பால் மற்றும் துண்டுகளாக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து முதலில் அதிக தீயில் வைத்து நன்றாக கொதி வந்ததும் 5 நிமிடங்கள் கழித்து தீயைக் குறைத்து மூடி போட்டு வேகவிடவும்.

கோழி நன்றாக வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்தோனேஷியாவின் மிகப் பிரபலமான கோழிக்குழம்பு இது. சாதம், வேகவைத்த நூடுல்ஸ் எல்லாவற்றோடும் இதை சேர்த்து சாப்பிடலாம். சைவப்பிரியர்கள் இதே முறையில் பீன்ஸ்(1" நீளத்தில் வெட்டியது), உருளைக்கிழங்கு(1" துண்டுகளாக்கியது), முட்டை கோஸ்(1" சதுரங்களாக வெட்டியது) சேர்த்து செய்யலாம்.