குறிஞ்சா வறை சுண்டல்
தேவையான பொருட்கள்:
குறிஞ்சா இலைகள் - 200 கிராம் வெங்காயம் - 30 கிராம் காய்ந்த மிளகாய் - 3 தேங்கய்ப் பூ - 4 - 5 மேசைக்கரண்டி மிளகாய்த்தூள் - அரைத் தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி உப்பு - அரைத் தேக்கரண்டி நல்லெண்ணெய் - 4 - 5 மேசைக்கரண்டி
செய்முறை:
குறிஞ்சா இலைகளை
ஒரு ஈரத் துணியால் அல்லது கிச்சன் டவலை நனைத்து
நன்கு துடைத்து எடுத்துக் கொள்ளவும். இலைகள் சுத்தமில்லாமல் இருந்தால்
நிறையத் தண்ணீரில் மெதுவாக அலசிக் கழுவி
துடைத்தெடுக்கவும். இலைகள் கசங்கினால் கைப்பு அதிகமாகும்.
பின்னர்
காம்புகளை நீக்கிவிட்டு
இலைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி
சிறிய கட்டுகளாக உருட்டி
மெல்லிய கூர்க்கத்தி அல்லது ப்ளேட்டை உபயோகித்து தலைமுடியைப் போல் மெல்லியதாக
நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோல் உரித்து மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டிரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் குறிஞ்சா இலைகளை போட்டு அதில் மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
உப்பு
தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு பிரட்டி வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம்
காய்ந்த மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பிரட்டி வைத்துள்ள குறிஞ்சா இலைகளை போட்டு பிரட்டவும்.
இரண்டு
மூன்று நிமிடம் பிரட்டிய பின்னர் உடனே இறக்கி வைத்து விடவும்.
சுவையான குறிஞ்சா வறை தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.