குரக்கன் ரொட்டி (கேழ்வரகு ராகி ரொட்டி)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குரக்கன் மா - 1 1/2 கப்

சிவப்பு அரிசி மா - 3/4 கப்

சர்க்கரை(வெல்லம்) - 3/4 கப்

பெரிய வாழைப்பழம் - 2 (சிறிதாயின் 4)

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து தண்ணீர் விடாது குழைக்கவும்.

பின்னர் மூடி அரை மணித்தியாலங்கள் விடவும்.

பின்னர் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் சிறிய வட்டமான ரொட்டிகளாக தட்டி ஒரு பானில் போட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.

சுவையான குரக்கன் ரொட்டி தயார். இதனை அப்படியே சாப்பிடலாம். பக்க உணவுகள் எதுவும் தேவை இல்லை.

குறிப்புகள்:

இதற்கு நன்கு பழுத்த வாழைப்பழங்கள் நன்றாக இருக்கும். நன்கு பழுத்த பழங்கள் பாவித்தால் தண்ணீர் விட்டு குழைக்க தேவை இல்லை.