குரக்கன் ரவை உப்புமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

குரக்கன் (கேழ்வரகு/ராகி) ரவை - 1 கப்

கத்தரிக்காய் - 1

தக்காளி - 1

வெட்டிய வெங்காயம் - 1/4 கப்

வெட்டிய புரோக்லி - 1/2 கப்

துருவிய கரட் - 1/4 கப்

தக்காளி பேஸ்ட் - 1 தேக்கரண்டி

பால் - 1 கப்

கறிவேப்பிலை - 2 நெட்டு

செத்தல் மிளகாய் - 5 - 6

எண்ணெய் - 5 மேசைக்கரண்டி

பெரிய சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு - 1/2 தேக்கரண்டி

உப்பு

மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை

செய்முறை:

குரக்கன் (கேழ்வரகு/ராகி) ரவையை வறுத்து வைக்கவும்.

கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.

தக்காளி சிறு துண்டுகளாக வெட்டவும்.

புரோக்லியை உப்பு சேர்த்து தண்ணீர் விடாது மைக்ரோவேவில் 4 நிமிடங்கள் வைத்து அவித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கறிவேப்பிலை , பெரிய சீரகம், கடுகை தாளிக்கவும்.

பின்னர் வெட்டி வைத்த கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

பின்னர் உப்பு, கரட், அவித்த புரோக்லியை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

கலவை நன்கு வதங்கியதும் இறக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.

காய்கள் வதக்கிய அதே பாத்திரத்தில் பால், 1/4 கப் தண்ணீர், உப்பு, தக்காளி, தக்காளி பேஸ்ட், செத்தல் மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். (பால் திரையாமல் கரண்டியால் அடிக்கடி துளாவவும்)

தக்காளி அவிந்ததும் அதனுள் வறுத்த ரவையை சிறிது சிறிதாக கொட்டி கிளறவும்.

ரவை அவிந்ததும் அதனுள் வதக்கிய மரக்கறி கலவையை கொட்டி அகப்பை காம்பால் கிளறி இறக்கவும்.

சுவையான உப்புமா தயார். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது எதவது கறி, குழம்புடன் உண்ணலாம்.

குறிப்புகள்:

நீரிழிவு(டயாபட்டீஸ்) நோயாளருக்கும் ஏற்ற சத்தான உணவு.