குடைமிளகாய் (கறிமிளகாய்) சாலட்
தேவையான பொருட்கள்:
குடைமிளகாய் (கறிமிளகாய்) - ஒரு கப்
(பச்சை, மஞ்சள், சிவப்பு (சிறிய துண்டுகளாக வெட்டி எல்லாம்சேர்த்து))
நறுக்கிய இஞ்சி - அரை தேக்கரண்டி
நறுக்கிய பச்சை மிளகாய் - 4
தயிர் - 2 கப்
கடுகு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கிய)
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மிளகுத் தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - அரைப்பாகம்
செய்முறை:
தாச்சியில் எண்ணெய் விட்டு கொதித்ததும் கடுகு, சீரகம், வெங்காயம் தாளித்து
பின்பு அதில் குடைமிளகாய்(கறிமிளகாய்), இஞ்சி பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் போட்டு வதக்கவும்.
பின்பு அதில் மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு, பெருங்காயத்தூள் போட்டு வதக்கவும். பின்பு ஆறவிடவும்
ஆறியதும் இந்தக்கலவையை தயிருடன் கலந்து ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
அதன் பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இஞ்சி சேர்த்திருப்பதால் மரவள்ளி கிழங்கு சாப்பிட கூடாது (இஞ்சி + மரவள்ளிக்கிழங்கு இரண்டும் சேர்ந்தால் நஞ்சு(ஆபத்து). குடைமிளகாய்(கறிமிளகாய்) கேன்சரை வரவிடாமல் தடுக்கும் பல வர்ண சாலட்.