கீரைப் புட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வறுத்த சிவப்பரிசிமா - 2 கப்

கலந்து வெட்டிய கீரை - 3 - 4 கப்

(அரைக்கீரை, புளிக்கீரை, பொன்னாங்கண்ணி,குறிஞ்சா, சண்டி, முருங்கை etc)

தேங்காய்ப்பூ - 4 - 5 மேசைக்கரண்டி

சிறிதாக வெட்டிய பச்சை மிளகாய் - 1 மேசைக்கரண்டி

உப்பு

செய்முறை:

கீரைக்கு இரு சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும்.

அரிசிமாவில் உப்பு சேர்த்து கலந்து சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.

மாவுக்கலவை கையால் பிடித்தால் நிற்கக் கூடிய பதத்திற்கு வந்ததும் அதனை ஒரு பரந்த தட்டில் (உ + ம்:-பேக்கிங் தட்டு) கொட்டி ஒரு தம்ளரினால் சிறிய குறுணல்களாக கொத்தவும்.

இதனுடன் தேங்காய்ப்பூ, வெட்டிய கீரைகள், பச்சை மிளகாய் கலந்து ஆவியில் அவித்து எடுத்து ஆறவிடவும்.

சுவையான கீரைப் புட்டு தயார். இதனை கறி, குழம்பு, சம்பல், சாம்பார் என அனைத்து பக்க உணவுகளுடனும் சாப்பிடலாம்.

குறிப்புகள்:

அரிசி மாவிற்கு பதில் குரக்கன் மா(ராகி) சேர்த்தும் செய்யலாம். குறிஞ்சா சேர்த்தால் சிறிது கைப்புத்தன்மை இருக்கும். எனவே அது விரும்பாதவர்கள் குறிஞ்சாவை தவிர்க்கலாம். நீரிழிவு நோயாளர்களுக்கு குரக்கன் மாவில்(ராகி) குறிஞ்சா சேர்த்து செய்து கொடுக்கலாம். வெளிநாட்டில் வசிப்போர் ஸ்பினாச், கேல், முருங்கை என இங்கு கிடைக்கும் அனைத்து கீரைகளையும் பாவிக்கலாம்.