கீரைத்துவையல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முளைக்கீரை(கழுவிய) - 150 கிராம்

பச்சைமிளகாய் - 5

உள்ளி - ஒன்று (பெரியது)

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - பாதி

தேங்காய்ப்பூ - பாதி (விரும்பினால்)

வெந்தயம் - கால் தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தேசிக்காய்சாறு (லைம் ஜூஸ்) - அரைத்தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - அரை தேக்கரண்டி

சீரகம் (தனியா) - அரை தேக்கரண்டி

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

வெங்காயம் - பாதி பாகம்

செய்முறை:

அடுப்பில் வெறும் வாணலி(தாச்சி)யை வைத்து அதை சூடாக்கவும்.

அதில் கடலைப்பருப்பினை போட்டு நன்றாக வறுக்கவும்.

அது ஓரளவு நன்றாக வறுத்ததும் அதை ஒரு தட்டில் போட்டு ஆறவிடவும்.

இதனைப்போல உளுத்தம்பருப்பினையும் நன்றாக வறுக்கவும். பச்சை மிளகாயைஇ துப்போல் நன்றாக வறுக்கவும் .

அதன் பின்பு வெந்தயதை போட்டு உடனே எடுத்துவிடவேண்டும் (இல்லாவிட்டால் கைப்பு சுவை ஏற்படும்).

கழுவிய முளைக்கீரையுடன் இருக்கும் நீருடன் நன்றாக வதக்கவும்.

முளைக்கீரையுடன் எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும். அதன் பின்பு சகலதையும் ஆறவிடவும்.

ஆறியதும் வறுத்த கடலைப்பருப்பு வறுத்த உளுத்தம்பருப்பு, வறுத்த பச்சைமிளகாய், உள்ளி, வறுத்த முளைக்கீரை, வறுத்த வெந்தயம், வெங்காயம், உப்பு இவையாவற்றையும் போட்டு கிரைண்டரில் (மிக்ஸியில்) அரைக்கவும்.

பிறகு தேங்காய்ப்பூ போட்டு கிரைண்டரில் (மிக்ஸியில்) நன்றாக அரைக்கவும்.

(தாளிக்க) அடுப்பில் வாணலி(தாச்சி)யை வைத்து எண்ணெய் விட்டு அதை சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம்(தனியா), வெங்காயம் தாளித்து துவையலில் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

கண் பார்வைக்கு சிறந்த ஓர் உணவு. விரும்பினால் தேங்காய்ப்பூ, உள்ளி சேர்க்கவும்.