கீரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீரை - ஒரு கட்டு

உப்பு - தேவையான அளவு

பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

கடுகு - கால் தேக்கரண்டி

பால் - ஒரு கப்

உள்ளி - 4 பல்

வெங்காயம் - அரைப்பாகம்

செய்முறை:

கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியிலோ அல்லது பாத்திரத்திலோ கீரையைப்போட்டு அதனுடன் உள்ளி போடவும்.

பச்சை மிளகாய் (நீளவாக்கில்) வெட்டி போடவும். இவையாவும் ஒரளவு அவிந்ததும் பால் விடவும். உப்பு சேர்த்து பின்பு நன்றாக அவியவிடவும்.

வெந்ததும் மத்தால் மசிக்கவும்.

அதன் பின்பு அடுப்பில் தாட்சியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் கடுகு, பெருஞ்சீரகம், வெங்காயம் தாளித்துக் கீரையில் கொட்டவும்.

அதன் பின்பு பரிமாறவும்.

குறிப்புகள்:

கீரை நார் சத்து நிறைந்த ஓர் உணவு பொருள். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - வெந்ததும் மத்தால் மசிக்கவும்.