கீன்வா சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கீன்வா - 1/2 கப்

புதினா இலை - 4

வெள்ளரிக்காய் - 2

தக்காளி - 1

எலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்

உப்பு - 1/4 ஸ்பூன்

ஆலிவ் எண்ணை - 2 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது

செய்முறை:

முதலில் கீன்வாவை கழுகி இரவே ஊறவைத்து மறுநாள் ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடிய தொங்க விடவும்.துணி காயும்பொழுது சில மணிநேரத்திற்கொருமுறை நீர் தெளித்து கொடுக்கவும்..கீன்வா மறுநாளைக்கு முளைகட்டியிருக்கும்

முளைத்த கீன்வாவோடு புதினா இலை பொடியாக நறுக்கியது,வெள்ளரிக்காய்,தக்காளி,வெங்காயம் நறுக்கி ஆலிவ் எண்ணை மற்றும் உப்பு சேர்த்து கிளறி சாப்பிடலாம்

குறிப்புகள்:

சத்துக்கள் ஏராளம் கொண்டது உடம்பை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமையாக சாலட்