கில் மீ டேட்ஸ் (kill me dates)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - 1 கப்

ரைஸீஸ் (அரிசிப்பொரி) - 3 கப்

பட்டர் - 150 கிராம்

சீனி - 1/2 கப்

முட்டை - 1 அடித்தது

வனிலா - சில துளிகள்

உலர்த்திய தேங்காய்த் துருவல் - 3/4 கப்

செய்முறை:

ஒரு நாண்ஸ்டிக் பானில் பட்டரை உருக்கவும்.

அதனுள் அடித்த முட்டையை ஊற்றி ஒரு மரக்கரண்டியினால் விரைவாகக் கலக்கவும். (முட்டை வெந்து விடக் கூடாது. எனவே பட்டர் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.)

அத்துடன் சீனி, நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்துக் காய்ச்சவும்.

பேரீச்சம் பழம் கரைந்ததும் வனிலா சேர்க்கவும்.

கலவை திரண்டு வரும் போது ரைசீஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும்.

ஆறும் முன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் உருண்டை பிடித்து தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும்.

குறிப்புகள்:

சட்டென்று செய்துவிடக் கூடிய சுவையான ஸ்நாக். காற்றுப் புகாமல் அடைத்து வைத்தால் இரண்டு மூன்று நாட்கள் மொருமொருப்புக் கெடாமல் இருக்கும்.