கில் மீ டேட்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கிய பேரீச்சம் பழம் - ஒரு கப் ரைஸீஸ் (அரிசிப்பொரி) - 3 கப் பட்டர் - 150 கிராம் சீனி - அரை கப் முட்டை - ஒன்று வனிலா - சில துளிகள் உலர்த்திய தேங்காய்த் துருவல் - முக்கால் கப்

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

முட்டையை அடித்து வைக்கவும்.

ஒரு நாண் ஸ்டிக் பானில் பட்டரை உருக்கவும்.

அதனுடன் அடித்த முட்டையை ஊற்றி ஒரு மரக்கரண்டியினால் விரைவாகக் கலக்கவும். (முட்டை வெந்து விடக்கூடாது. எனவே பட்டர் சூடாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்).

அத்துடன் சீனி

நறுக்கிய பேரீச்சம்பழம் சேர்த்துக் காய்ச்சவும்.

பேரீச்சம் பழம் கரைந்ததும் வனிலா சேர்க்கவும்.

கலவை திரண்டு வரும் போது ரைஸீஸ் சேர்த்து

நன்கு கிளறி இறக்கிவிடவும்.

ஆறும் முன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் உருண்டைகளாக பிடித்து

தேங்காய்த் துருவலில் புரட்டி எடுக்கவும்.

சட்டென்று செய்துவிடக் கூடிய சுவையான ஸ்நாக் இது. காற்றுப் புகாமல் அடைத்து வைத்தால் இரண்டு மூன்று நாட்கள் மொறுமொறுப்புக் கெடாமல் இருக்கும்.

குறிப்புகள்: