கிறீம் சர்பத்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் - 2 கப்

ரோஸ் எசன்ஸ் - 1 தேக்கரண்டி

சீனி - 6 மேசைக்கரண்டி

சோள மா - 1/2 கப்

கசகசா - 1 தேக்கரண்டி

ரோஸ் கலர் - 4 துளி

எலுமிச்சை சாறு - 1/2 தேக்கரண்டி

பொடியாக வெட்டிய கஜு - 3 மேசைக்கரண்டி

வனிலா ஐஸ்கிறீம் - 2 ஸ்கூப்

செய்முறை:

பாலை காய்ச்சி குளிரூட்டவும்.

சோள மாவினை தண்ணீரில் கரைத்து 2 துளி ரோஸ் கலர், 2 மேசைக்கரண்டி சீனி சேர்த்து இறுகும் வரை சூடாக்கவும்.

சூடாக இருக்கும் போதே அதனை முறுக்கு உரலில் போட்டு ஐஸ் தண்ணீரினுள் 2 அங்குல நீள துண்டுகளாக பிழிந்து விடவும். ((f)பலூடா)

கசகசாவை சிறிது சுடு தண்ணீரினுள் போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும்.

பின்னர் குளிராக்கிய பால், ரோஸ் எசன்ஸ், மீதி சீனி, 2 துளி ரோஸ் கலர், எலுமிச்சை சாறு, ஐஸ் கட்டிகள் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.

இதனை உயரமான கிளாஸில் ஊற்றி ஊறவைத்த கசகசா, பலூடா, 2/3 ஐஸ் கட்டிகள்சேர்த்து கிளறி விடவும்.

பின்னர் 1 ஸ்கூப் வனிலா ஐஸ்கிறீமை மேலே போட்டு பொடியாக வெட்டிய கஜுவை தூவி நீளமான கரண்டி, உறிஞ்சு குழாய் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தேவைக்கேற்ப சீனியை கூட்டி குறைக்கலாம். பலூடவிற்குப் பதிலாக ரைஸ் நூடில்ஸை சிறிது சீனி சேர்த்து தண்ணீரில் அவித்து வடித்தும் பயன்படுத்தலாம். சைனீஸ் ரைஸ் நூடில்ஸ் நன்றாக இருக்கும். ஐஸ்கிறீம் சேர்க்காமலும் குடிக்கலாம்.