கிரு போகிபா (2)
தேவையான பொருட்கள்:
கார்ன் மாவு - ஒரு கப் பந்தன் இலை - 4 துண்டுகள் தேங்காய் பால் - 3 கப் சர்க்கரை - அரை கப் ரோஸ் வாட்டர் - அரை தேக்கரண்டி
செய்முறை:
சலித்த மாவுடன் சர்க்கரையை கலந்து கொள்ளவும்.
அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கட்டியின்றி கலந்து கொள்ளவும்.
பின் ரோஸ் வாட்டர்
பந்தன் இலை சேர்த்து ஒரு நான் - ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயில் வைத்து கிளறி கொண்டே இருக்கவும்.
ஓரங்களை நன்றாக வழித்து விட்டு நன்கு கலந்து கொண்டே இருக்கவும். ஏறக்குறைய 10 - 20 நிமிடம் ஆகும். கைவிடாமல் கிளறுவது அவசியம். இல்லையெனில் கட்டிகளாகக் கூடும்.
பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது இறக்கி ஒரு தட்டில் ஊற்றி பரப்பவும். பந்தன் இலைகளை எடுத்து விட்டு சமன் படுத்தவும்.
சற்று ஆறியதும் ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து தட்டை கவிழ்த்தால் கேக் போல் வரும். அப்படியே விருப்பம் போல் துண்டுகள் போட்டு பரிமாறலாம். சுவையான கிரு போகிபா தயார்.