கிரு போகிபா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - அரை கப் (60 கிராம்) கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்) Unsalted பட்டர் - 25 கிராம் + ஒரு மேசைக்கரண்டி (பாத்திரத்தில் தேய்க்க) முட்டை - 1 அல்லது 2 வெனிலா எசன்ஸ் - சிறிது பேக்கிங் பவுடர் - கால் மேசைக்கரண்டி முந்திரி / நட்ஸ் வகைகள் - சிறிது

செய்முறை:

அவனை 180 Cல் முற்சூடு செய்யவும். பேக் செய்ய பயன்படுத்த போகும் பாத்திரத்தை வெண்ணெய் தேய்த்து தயாராக வைக்கவும். முட்டையை தனியாக உடைத்து ஊற்றி முதலில் கலந்து கொள்ளவும்.

முட்டையுடன் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இதில் ரூம் டெம்பரேச்சரில் உள்ள வெண்ணெய் சேர்க்கவும். [கண்டன்ஸ்டு மில்க் இனிப்பு போதாது என்றால் இந்த நிலையில் சிறிது சர்க்கரை சேர்க்கவும்]

மைதாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து அதில் முட்டை கலவையை சேர்க்கவும்.

கடைசியாக வெனிலா எசன்ஸ் மற்றும் பொடியாக நறுக்கிய நட்ஸ் வகைகள் கலந்து பேக் செய்ய போகும் பாத்திரத்தில் ஊற்றி 20 - 30 நிமிடம் பேக் செய்யவும்.

ஒரு டூத் பிக் / கத்தியை விட்டு அது சுத்தமாக வெளியே வந்தால் எடுத்து விடவும். (மேலே நல்ல ப்ரவுன் கலர் வரும். நான் அதை நீக்கி இருக்கிறேன்.) இந்த போகிபா செய்வது சுலபம்

சுவை அருமையாக இருக்கும். ரொம்ப ரொம்ப சாஃப்ட்டாகவும் இருக்கும்.

குறிப்புகள்: