கிரீமி ஷிரிம்ப் பாஸ்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்தா (fettuccine) - 300 கிராம்

இறால் - அரைக் கிலோ

நறுக்கிய மஷ்ரூம் - ஒரு கோப்பை

நறுக்கிய வெங்காயம் - ஒன்று

நசுக்கியபூண்டு - இரண்டு பற்கள்

எலுமிச்சைச்சாறு - ஒரு மேசைக்கரண்டி

கேப்பர்ஸ் - இரண்டு தேக்கரண்டி

கிரீம் சீஸ் - 250 கிராம்

பால் - ஒரு கோப்பை

வொர்ஸெஷ்டர்ஷர் சாஸ்(worcestershire) - ஒரு மேசைக்கரண்டி

வெண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

ஆலிவ் எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

பார்ஸ்லி தழை - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்து அதில் எலுமிச்சைச்சாற்றை ஊற்றி கலந்து வைக்கவும்.

பாஸ்தாவை ஒரு தேக்கரண்டி உப்புத்தூள் கலந்த கொதிக்கும் நீரில் போட்டு வேகவிடவும்.

அடிகனமான சட்டியில் வெண்ணெய், எண்ணெயை கலந்து ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு பூண்டைப் போட்டு அதையும் நன்கு வதக்கவும்.

அதைத் தொடர்ந்து மஷ்ரூம் மற்றும் ஊறிய இறாலைப் போட்டு அரை தேக்கரண்டி உப்புத்தூள், மிளகுத்தூள் போட்டு நன்கு வதக்கி விட்டு வெந்தவுடன் உடனே இறக்கி வைக்கவும்.

ஒரு சிறிய சாஸ் பேனில் கிரீம் சீஸ் மற்றும் பாலைச் சேர்த்து கலக்கவும். பிறகு அதில் வொர்ஸெஷ்டர்ஷர் சாஸையும். கேப்பர்ஸ்ஸையும் போட்டு கலந்து சூடுப்படுத்தவும். மீதியுள்ள உப்பையும், மிளகுத்தூளையும் போட்டு கலக்கவும்.

இதற்கிடையில் பாஸ்தா வெந்தவுடன் நீரை வடித்து விட்டு பரிமாறும் தட்டில் போடவும். பிறகு தயாரித்த கிரீம் சாஸை ஊற்றி நன்கு கலந்து வதக்கி வைத்துள்ள இறாலை கலவையில் பரவலாக போடவும்.

அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள பார்ஸ்லி தழையை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: