கிரீன் சால்சா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்தமல்லி தழை - ஒரு கோப்பை

பேஸில் - ஒரு கோப்பை

பார்ஸ்லி - ஒரு கோப்பை

பாதாம் பருப்பு - அரைக் கோப்பை

பூண்டு - இரண்டு பற்கள்

நறுக்கிய வெங்காயத்தாள் - இரண்டு மேசைக்கரண்டி

ரெட் சில்லி ஃபிளேக்ஸ் - அரை தேக்கரண்டி

வினிகர் - இரண்டு மேசைக்கரண்டி

எக்ஸ்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில் - ஒரு கோப்பை

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி

செய்முறை:

பாதாம் பருப்பை வெறும்சட்டியில் போட்டு நன்கு வறுத்து ஆறவைக்கவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் உப்பு சேர்த்து நீரை கொதிக்க வைக்கவும். அதில் தழைகளைப் போட்டு ஒரு நிமிடம் கழித்து அரித்தெடுத்து குளிர்ந்த நீரில் போடவும்.

தழைகள் நீரில் ஆறியவுடன் கைகளில் நீரை ஒட்ட பிழியவும். பிறகு அரவை இயந்திரத்தில் பாதாம் பருப்புகளுடன், பிழிந்த தழைகளைப் போட்டு அதனுடன் பூண்டு, சில்லி ஃபிளேக்ஸ், உப்பில் பாதி மற்றும் மிளகுத்தூளையும் போட்டு அரைக்கவும். அரைக்கும் பொழுது ஆலிவ் எண்ணெயை சிறிது சிறிதாக ஊற்றிக்கொண்டே அரைக்கவும்.

சால்சா நன்கு அரைந்து கெட்டியாக ஆனதும் எடுத்து ஒரு கோப்பையில் போட்டு அதனுடன் வெங்காயத்தாளையும் சேர்த்து கலக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்.

தேவைப்படும்பொழுது வினிகரைச் சேர்த்து கலக்கி தேவைப்பட்டால் மீதியுள்ள உப்பையும் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

இந்த சுவையான சால்சாவை கிரில் செய்யும் சைவ, அசைவ உணவுகளின் மீது ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: