கிரி அலுவா
தேவையான பொருட்கள்:
கண்டன்ஸ்டு மில்க் - அரை டின் (200 கிராம்) சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் - சில துளிகள் முந்திரி - ஒரு கைப்பிடி பட்டர் - 20 கிராம்
செய்முறை:
திக் பாட்டம் உள்ள நாண்ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரையுடன் 3 மேசைக்கரண்டி நீர் விட்டு கரைய விடவும். ஒரு தட்டிலும்
ஒரு கத்தியிலும் சிறிது வெண்ணெய் தடவி தயாராக வைக்கவும். சர்க்கரை கரைந்ததும் கண்டன்ஸ்டு மில்க் மற்றும் வெண்ணெய் சேர்த்து சிறுந்தீயில் வைத்து கலக்கவும்.
சிறிது நேரத்தில் பொங்கி வரும். கலந்து கொண்டே இருக்க வேண்டும். பாத்திரம் சற்று ஆழமானதாக இருந்தால் நல்லது.
சிறிது சிறிதாக கெட்டியாகி கொண்டே வரும். 15 நிமிடத்துக்கு மேல் எடுக்கும். நன்று கெட்டியாகும் போது பொடியாக நறுக்கிய முந்திரி
வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும்.
அடுத்த சில நொடிகளில் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.
உடனே எடுத்து வெண்ணெய் தடவிய தட்டில் பரப்பி
வெண்ணெய் தடவிய கத்தியால் மேல் பக்கம் தேய்த்து சமமாக்கவும். சூடு இருக்கும் போதே மேலே லேசான கோடு போட்டு வைக்கவும். எனக்கு 1 1/2 இன்ச் அளவில் 12 சதுர துண்டுகள் கிடைத்தது.
மிதமான சூடுக்கு வந்ததும்
அல்லது ஆறியதும் கத்தியால் கோடு போட்ட இடத்தில் அழுத்தி வெட்டி துண்டுகளாக்கவும். சுவையான கிரி அலுவா தயார். இது ரொம்ப சாஃப்ட்டாக இருக்காது
அதே சமயம் கெட்டியாகவும் இருக்காது. சிறு வயதில் பச்சை நிற காகிதம் சுற்றி ஒரு சாக்லேட் கிடைக்கும்
இப்போது கிடைப்பதில்லை
ஏறக்குறைய அதே சுவை வரும்.