கிரிஸ்பி லாலி பாப் சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் லெக் பீஸ் - பத்து

எலுமிச்சை - இரண்டு

முட்டை - இரண்டு

மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி

உப்பு தூள் - இரன்டு தேக்கரண்டி

சிக்கன் 65 மசாலா - இரண்டு தேக்கரண்டி

ப்ரெட் க்ரம்ஸ் - கால் கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

சோள மாவு - ஒரு மேசைக்கரண்டி

பொரிக்க:

எண்ணெய் - கால் கப்

பட்டர் - இரன்டு மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் சிக்கனை தோல் எடுத்து அதை நன்கு கழுவி அதில் ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து பத்து நிமிடம் ஊற வைத்து கழுவி தண்ணீர் முழுவதும் வடிகட்டவும்.

அதில் பாதி உப்பு, பாதி சிக்கன் மசாலா, ஒரு எலுமிச்சை சாறு, பாதி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு பிசறி குக்கரில் இரண்டு விசில் விட்டு இறக்கி அதில் இருக்கும் தண்ணீரை வடித்து விடுங்கள்.

இப்போது முட்டையை நன்கு அடித்து அதில் மீதி உள்ள சிக்கன் மசாலா, மிளகாய் தூள், உப்பு போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி போட்டு க்ரம்ஸ் பவுடரையும் சேர்த்து வடித்து வைத்துள்ள சிக்கனை போட்டு நன்கு பிசறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

பிறகு மறுபடியும் ஒரு முறை பிசறி ஒரு ஆழ இரும்பு கடாயில் எண்ணெய் விட்டு மூன்று மூன்று துண்டுகளாக போட்டு எடுக்கவும்.

குறிப்புகள்:

பிள்ளைகளுக்கு சிக்கன் ஃப்ரைதான் ரொமப பிடிக்கும் இந்த முறை ஒரு வித்தியாமான டேஸ்ட், kfc, தாஜ் சிக்கன் மாதிரி இது நானே ட்ரை செய்தது. இந்த சுவையை சொல்ல வார்த்தைகள் இல்லை

ஊற வைப்பது உங்க இஷ்டம் தான் நேற்றே ஊற வைத்து இன்று கூட பொரிக்கலாம். சுவை அபாரம், போன வாரம் மூன்று நாள் தொடர்ந்து இது தான் எங்க வீட்டில் பசங்களுக்கு ரொம்ப பிடித்து போச்சு நல்ல க்ரிஸ்பியாக இருந்தது.