கிரிஸ்பி சமோசா
தேவையான பொருட்கள்:
சமோசா தாள் - 1 பாக்கெட்(feuille de brick)
மீன் டின் - 1
வெங்காயம் - 1
கேரட் - 2
மல்லி,புதினா - சிறிது
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - சிறிது
முட்டை - 2
பூண்டு தூள் - சிறிது
செய்முறை:
மீன் டின்னில் உள்ள நீரை (அ) எண்ணெய்யை வடித்து விடவும்,வடித்த மீனுடன் பொடியாக நருக்கிய வெங்காயம்,மல்லி,பொதினா,துருவிய கேரட்,உப்பு,மிளகு தூள்,பூண்டு தூள் ஆகியவற்றை சேர்த்து கிளரி வைக்கவும்.முட்டைகளை கலக்கி வைக்கவும்,
சமோச தாள் வட்டமாக இருக்கும்,அதை 4 சம பாகங்களாக வெட்டவும்.
1பாகத்தை எடுத்து அதன் மேல் முட்டையை தடவவும்,பிறகு அதன் மேல் மீன் கலவையை வைக்கவும்.
இதை எல்லா பக்கமும் மூடும்படி மடித்து அவன் ட்ரேயின் மேல், மூடிய பாகம் கீழ் நோக்கி இருக்குமாறு அடுக்கவும்.150° சூட்டில் 20 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும்.
சூடாக சாப்பிட நன்றாக இரூக்கும்.மாலை டிஃபனுக்கு ஏற்றது.கொஞ்சம் கூட எண்ணைய் இல்லாத சமோசா ரெடி.
குறிப்புகள்:
இந்த சமோசா தாள் ஃபிரான்ஸில் கிடைக்கிறது,காரம் வேண்டுமானால் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளலாம்,இதனுடன் துருவிய சீஸ் சேர்த்து செய்தால்,வேகும் போது சீஸ் உருகி சுவை இன்னும் நன்றாக இருக்கும்.