கிரில்டு ஹமூர் ஃபிஷ் ஃபில்லட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஹமூர் ஃபிஷ் ஃபில்லட் - 600 கிராம்

எலுமிச்சை - ஒன்று

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

சிக்கன் டிக்கா பவுடர் - ஒரு தேக்கரண்டி

மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி

ரெட் கலர் - பின்ச்

உப்பு - தேவைக்கு

செய்முறை:

ஃபிஷ் ஃபில்லட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிக்கன் டிக்கா பவுடர், மிளகுத்தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, ரெட் கலர், உப்பு, எண்ணெய் சேர்த்து கலந்து மசாலா தயார் செய்துக் கொள்ளவும்.

தயார் செய்து வைத்திருக்கும் மசாலாவை ஃபிஷ் ஃபில்லட்டில் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு மைக்ரோவேவில் க்ரில் செட் செய்து டைம் செட் செய்யவும், 5 நிமிடம் முற்சூடு செய்து க்ரில் ப்ளேட்டில் மீனை வைத்து சுமார் 40 நிமிடம் கழித்து எடுக்கவும்.

20 நிமிடத்தில் மீனின் ஒரு பக்கம் வெந்து விடும், திருப்பி போட்டு மறுபடி 20 நிமிடம் வைத்து எடுத்தால் ஃபில்லட் முழுமையாக தயாராகி விடும். கவனமாக வெளியே எடுக்கவும்.

சுவையான சத்தான க்ரில்டு ஃபிஷ் ஃபில்லட் ரெடி. இதனை வெஜ் சாலட்டுடன் பரிமாறவும்

குறிப்புகள்: