கிரில்டு சீஸ் சான்ட்வீச்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஒயிட் பிரட் துண்டுகள் - நான்கு

சீஸ் ஸ்லைஸ்( cheddar cheese) - இரண்டு

வெண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

சீஸை ரெடிமேடான ஸ்லைஸ்களை உபயோகிக்கலாம். அல்லது ரொட்டியின் அளவிற்கு ஏற்றவாறு ஸ்லைஸ் செய்துக் கொள்ளலாம்.

தோசைக்கல் அல்லது அடிகனமான பானை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

பிறகு இரண்டு ரொட்டிகளின் இடையில் ஒரு ஸிலைஸ் சீஸை வைக்கவும்.

வெண்ணெயில் சிறிதை ரொட்டியின் வெளிப்புறங்களில் தடவி சூடான பானில் வைக்கவும். ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.

சீஸானது உருக ஆரம்பிக்கும் பொழுது உடனே எடுத்து விட்டு குறுக்காக நறுக்கி உடனே பரிமாறவும்.

குறிப்புகள்: