கிரில்டு கிங் ப்ரான்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் பெரியது - அரை கிலோ (10 - 12 இருக்கும்)

தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பப்ரிகா பவுடர் - 1 டீஸ்பூன்

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 3

குடை மிளகாய் (மஞ்சள், சிவப்பு) - 1

மல்லி இலை - கொஞ்சம்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை சுத்தம் செய்து வாலை மட்டும் அகற்றாமல் வைத்து கழுவி தண்ணீர் வடிகட்டிக்கொள்ளவும். வெங்காயம், குடை மிளகாய், மல்லி இலை கட் செய்து வைக்கவும்.

இறாலில் தயிர், இஞ்சி பேஸ்ட், பப்ரிக்கா பவுடர், சிறிது உப்பு சேர்த்து அரை மணி முதல் - ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.

பின்பு மெல்லியதாக நீளமாக கட் செய்த வெங்காயத்தை கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வதக்கவும். பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். சில்லி பவுடர் சேர்க்கவும். பின்பு மஞ்சள், சிவப்பு குடை மிளகாய் கட் செய்ததை சேர்த்து, உப்பு சிறிது சேர்த்து 5 நிமிடம் வதக்கி வைக்கவும்.

பின்பு கிரில் அடுப்பில் ஊறிய கிங் ப்ரானை 10-15 நிமிடம் க்ரில் செய்து எடுக்கவும். க்ரில் அடுப்பு இல்லாதவர்கள் க்ரில் பேனில் கூட செய்யலாம். இதுவும் சார்கோல் எஃபக்ட் இருக்கும்.

க்ரில் செய்து எடுத்ததை வதக்கிய வெங்காயம், குடை மிளகாய் உடன் சேர்த்து மல்லி இலை தூவி பரிமாறவும்.

சூப்பர் மணமும் சுவையுமுள்ள க்ரில்டு கிங் ப்ரான் ரெடி.

குறிப்புகள்:

இதனை குபூஸ், ஹமூஸ், வெஜ் சாலட், ஆரஞ்சு ஜூஸ் அல்லது ப்ளைன் டீ உடன் பரிமாறலாம். இறாலை முன்பே மசாலாவில் ஊறவைத்துவிட்டால் செய்வது சுலபமாக இருக்கும்.