கிரிபத்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கிரிபத் செய்ய: பச்சரிசி அரிசி - ஒரு கப் தேங்காய் பால் - ஒரு கப் உப்பு நீர் - 2 கப் கட்ட சம்பல் செய்ய: சின்ன வெங்காயம் - ஒரு கை மிளகாய் வற்றல் - 4 டூனா மீன் - 2 மேசைக்கரண்டி எலுமிச்சை - பாதி உப்பு

செய்முறை:

அரிசியை கழுவி நீர் விட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.

தேங்காயை துருவி அரைத்து கெட்டியாக ஒரு கப் முதல் பால் எடுக்கவும்.

வெந்த சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் சிறுந்தீயில் வைத்து வேக விடவும். தேங்காய் பால் முழுதும் சாதம் இழுத்துக் கொள்ளும். பொங்கலை விட சற்று கெட்டியான பதத்தில் கிடைக்கும். இது தான் கிரிபத்.

கட்ட சம்பல் செய்ய தேவையானவற்றை தயாராக வைக்கவும். முதலில் மீன்

மிளகாய் வற்றல்

உப்பு சேர்த்து அரைக்கவும். பின் வெங்காயம் சேர்த்து அரைக்கவும். கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து எடுக்கவும்.

முடிந்தால் அம்மியில் அரைக்கவும்

இல்லை எனில் மிக்ஸியில் நீரின்றி அரைக்கவும். கட்ட சம்பல் தயார்.

கிரிபத்தை தட்டில் கொட்டி அழுத்தி சமமாக்கவும். பின் கத்தியால் துண்டுகள் போடவும். இதன் மேல் கட்ட சம்பல் வைத்து பரிமாறலாம்.

மற்றொரு காம்பினேஷன்: கித்துள் கருப்பட்டி. கிரிபத் ஒரு லேயர் பரப்பி அதன் மேல் கித்துள் கருப்பட்டி பரப்பவும். இதன் மேல் மீண்டும் ஒரு லேயர் கிரிபத் பரப்பவும். பின் துண்டுகளாக்கவும். சுவையான கிரிபத் தயார்.

குறிப்புகள்: