கிரான்பெர்ரி ரிலீஷ்
தேவையான பொருட்கள்:
கிரான்பெர்ரி - கால்க்கிலோ
ஆரஞ்சு பழம் - ஒன்று
நறுக்கிய கிரிஸ்டலைஸ்ட் ஜின்சர் - கால் கோப்பை
உலர்ந்த திராட்சை - இரண்டு மேசைக்கரண்டி
சர்க்கரை - இரண்டு மேசைக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
மிளகுத்தூள் - கால்தேக்கரண்டி
செய்முறை:
கிரான்பெர்ரிஸ்ஸை நன்கு கழுவி அரவை இயந்திரத்தில் போடவும்.
ஆரஞ்சு பழத்தை அதன் தோலுடன் சேர்த்து சிறிய துண்டுகள் செய்யவும்.
பிறகு இதனுடன் மற்ற எல்லாப் பொருட்களையும் இயந்திரத்தில் போட்டு சிறிது நீரைச் சேர்த்து அரைக்கவும்.
மையாக அரைக்க வேண்டியதில்லை. சற்று ஒன்றும் பாதியுமாக அரைப்பட்டால் போதுமானது.
அரைத்தபிறகு அதை ஒரு கோப்பையில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடவும்.
குறைந்தது ஒரு நாள் முழுவதும் ஊறிய பிறகு உபயோகித்தால் சுவை அதிகமாக இருக்கும்.
இந்த சட்னியை டர்க்கி அல்லது சிக்கன் ரோஸ்ட்டுகளுக்கு பக்க உணவாக வைத்து பரிமாறவும்