கிம் சீ (kim chee) (1)
தேவையான பொருட்கள்:
கோவா - நடுத்தர அளவானது 1
கறி உப்பு - 3 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் - ஒரு சிறு கட்டு
இஞ்சி (மசித்தது) - 1 மேசைக்கரண்டி
நருவல் மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
சீனி - 1 தேக்கரண்டி
நீர் - 6 கோப்பை
செய்முறை:
கோவாவை ஒரு அங்குல நீளக் குற்றிகளாக வெட்டி, அடி தட்டையான ஒரு பாத்திரத்தில் போடவும்.
நீரில் உப்பைக் கரைத்து கோவா இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் ஒரு பாரமான தட்டைப் போட்டு இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் நீரை வடிகட்டவும். வடிகட்டிய நீரைச் சேமித்து வைக்கவும்.
கோவாத் துண்டுகளோடு நீளமாக அரிந்த வெங்காயத்தாள், மிளகாய்த்தூள், மசித்த இஞ்சி, சீனி அனைத்தையும் கலக்கவும்.
ஒரு சுத்தமான கண்ணாடிச் சாடியில் இட்டு சேமித்து வைத்துள்ள உப்பு நீரால் மீதிச் சாடியை நிரப்பி மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
நான்கைந்து நாட்களில் ‘கிம் சீ’ பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும். வாரக்கணக்கில் கெடாது இருக்கும்.
குறிப்புகள்:
தென் கொரியர்களின் உணவான கிம் சீ பல்வேறு விதங்களில், பல்வேறு உணவுப் பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவர்களது ‘ஊறுகாய்’ முறை இது எனலாம். முன்பெல்லாம் இப்படி கிம் சீ தயாரித்து பெரிய சாடிகளில் நிலத்தின் கீழ் புதைத்து வைப்பார்களாம். இப்போது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கிறார்கள்.
கிம் சீயை இப்படியே ஒரு பக்க உணவாகக் கொள்ளலாம்; அல்லது வேறு உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கும் போது சுவைக்காகச் சிறிது சேர்க்கவும் செய்யலாம்.