கிம் சீ (kim chee)
தேவையான பொருட்கள்:
கோவா - ஒரு கிலோ கறி உப்பு - 3 மேசைக்கரண்டி வெங்காயத்தாள் - ஒரு சிறு கட்டு இஞ்சி (மசித்தது) - ஒரு மேசைக்கரண்டி நருவல் மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி சீனி - ஒரு தேக்கரண்டி நீர் - 6 கோப்பை
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
கோவாவை ஒரு அங்குல நீளக் குற்றிகளாக வெட்டி
தட்டையான பாத்திரம் ஒன்றில் போடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கோவா இருக்கும் பாத்திரத்தில் உப்பு நீர் முழுவதையும் ஊற்றவும்.
அதன் மேல் ஒரு தட்டைப் போட்டு மூடி
பாரம் வைத்து இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் நீரை வடித்து எடுக்கவும். (நீரைத் தனியாகச் சேமித்து வைக்கவும்.)
வெங்காயத் தாளை நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சியை மசித்து வைத்துக் கொள்ளவும்.
கோவாத் துண்டுகளோடு மீதி அனைத்தையும் சேர்த்துக் கலக்கவும்.
சுத்தமான கண்ணாடிச் சாடியில் போட்டு
சேமித்து வைத்துள்ள உப்பு நீரால் மீதிச் சாடியை நிரப்பி மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.