கினோவா பிரியாணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கினோவா(Quinoa) - 1 1/2 கப் பெரிய வெங்காயம் - ஒன்று பெரிய தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 4 கேரட்

பீன்ஸ்

உருளை

பட்டாணி கலந்தது - 1 1/2 கப் இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 6 (சிறிய பற்கள்) ம‌ஞ்ச‌ள்தூள் - கால் தேக்க‌ர‌ண்டி மிள‌காய்த்தூள் - 3/4 தேக்க‌ர‌ண்டி த‌னியாத்தூள் - 1 1/2 தேக்க‌ர‌ண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி எண்ணெய் - ‍ தாளிக்க‌ கடுகு - அரை தேக்க‌ர‌ண்டி சீர‌க‌ம் - ஒரு தேக்க‌ர‌ண்டி உப்பு - தேவையான‌ அள‌வு க‌றிவேப்பிலை - ‍ சிறிது கொத்த‌ம‌ல்லி - அல‌ங்க‌ரிக்க‌

செய்முறை:

வெங்காய‌த்தை குறுக்கில் வெட்டி பின் நீள‌வாக்கில் நறுக்கி வைக்க‌வும். ப‌ச்சைமிள‌காயை நீள‌வாக்கிலும்

தக்காளியை பொடியாகவும் நறுக்கி வைக்க‌வும். இஞ்சியை தோலெடுத்து பொடியாக‌ ந‌றுக்கி லேசாக தட்டி வைக்க‌வும். பூண்டை தோலுரித்து வைக்க‌வும்.

முத‌லில் கினோவாவை த‌ண்ணீரில் போட்டு க‌ழுவி

புது த‌ண்ணீர் விட்டு ஒரு அரை மணி நேரம் ஊற‌ விட‌வும்.

ஒரு அடி க‌ன‌மான‌ பாத்திர‌த்தில்

எண்ணெய் விட்டு

க‌டுகு போட்டு வெடித்த‌தும்

சீரக‌ம் போட்டு பொரிய‌ விட‌வும். பின் வெங்காய‌ம்

க‌றிவேப்பிலை

ப‌ச்சைமிள‌காய் போட்டு ஒரு 5 நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்க‌வும்.

வெங்காய‌ம் நிற‌ம் மாறி வ‌ரும் போது இஞ்சி

பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு பொடியாக நறுக்கி வைத்த த‌க்காளியை போட்டு

பாதி உப்பு

ம‌ஞ்ச‌ள்தூள் போட்டு வ‌த‌க்க‌வும்.

த‌க்காளி ந‌ன்கு வ‌த‌ங்கி மசிந்து வ‌ரும் போது

காய்க‌றி க‌ல‌வையை போடவும்.

சிறிது நேரம் வ‌தக்கியதும்

மீதம் உள்ள தூள் வகைகளை எல்லாம் சேர்க்கவும்.

மேலும் சில‌ நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்கி

மீதி உப்பையும் சேர்த்து

ஒரு கப் கினோவாவிற்கு 1 3/4 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடாகி கொதிக்க தயாராகும் போது

ஊற வைத்த கினோவாவை நீரை வ‌டித்து எடுத்து சேர்க்கவும்.

எல்லாமாக சேர்ந்து நன்கு கொதி வந்ததும்

மூடிபோட்டு

அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். கினோவா வேக‌

சுமார் 20 - 25 நிமிடங்கள் வரை ஆகலாம்.

அதன்பிறகு மூடியை திறந்து பார்த்து தேவைப்பட்டால் மேலும் சில நிமிடங்கள் விட்டு

நீர்வ‌ற்றி வேகும் வரை வைத்திருந்து

பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைத்தூவி தயிர்பச்சடியுடன் பரிமாறவும்.

மாறுப்ப‌ட்ட‌ சுவையுட‌ன்

ஆரோக்கிய‌மான‌ கினோவா(Quinoa) பிரியாணி த‌யார்!

குறிப்புகள்: