கிட்ஸ் சிக்கன் ரோஸ்ட்
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் - கால் கிலோ (சதைப்பகுதி) புளிக்கரைசல் - ஒரு மேசைக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சிக்கனுடன் உப்பு
மஞ்சள் தூள்
மிளகுத் தூள் மற்றும் புளிக்கரைசல் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
சிக்கன் ஊறியதும் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.
நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியதும் பட்டர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வறுத்தெடுக்கவும்.
டேஸ்டி & ஈஸி கிட்ஸ் சிக்கன் ரோஸ்ட் ரெடி.