கிட்ஸ் ஆனியன் ரிங்ஸ் (Kids Onion Rings)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 2

மோர் - 2 கப்

மைதா மாவு - 1 கப் + 1 கப்

துருவிய பூண்டு - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

முதலில் வெங்காயத்தினை 1 இன்ச் அளவிற்கு வட்டமாக வெட்டவும்.

பின்பு வெட்டி வைத்துள்ள வட்டம் வடிவான வெங்காயத்தினை தனி தனி வட்டமாக( ரிங்ஸாக) பிரிக்கவும்.

பிரித்த ரிங்ஸை 2 கப் மோரில் 1 தேக்கரண்டி உப்பு மற்றும் துருவிய பூண்டு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா மாவுடன் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் உடன் நன்றாக கரைத்து கொள்ளவும்.

வேறு ஒரு தட்டில் 1 கப் மைதா மாவினை தனியாக வைக்கவும்.

எண்ணெயினை பொரிப்பதற்கு காயவைக்கவும்.

எண்ணெய் காய்ந்ததும் மோரில் இருந்து ஒவ்வொரு ரிங்ஸாக எடுத்து மைதா மாவில் பிரட்டி பிறகு மைதா மாவு கரைச்சலில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

இப்பொழுது சுவையான ஆனியன் ரிங்ஸ் ரெடி. இதனை சாஸுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

மிகவும் சுவையான ஸ்னாக். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.