கிட்ஸ் அஸ்பேரகஸ்
0
தேவையான பொருட்கள்:
அஸ்பேரகஸ் - 1 கட்டு
உப்பு - தேவைக்கு
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - சிறிது
எண்ணைய் - சிறிது
செய்முறை:
முதலில் அஸ்பேரகஸை கழுவி அடிபாகத்தை ஒடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணைய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் சேர்த்து வெடிக்க விடவும்.
பின் அஸ்பேரகஸை இரண்டாக நறுக்கி எண்ணையில் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின் உப்பு மற்றும் மிளகுத் தூளை சேர்த்து பிரட்டவும்,
அதிக நேரம் வேக விடாமல் 5 நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்தால் தான் அதன் முழு சத்தும் கிடைக்கும்.