காளான் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம்- ஒரு கப்

காளான் -100 கிராம்

வெங்காயம்-2

பச்சைமிளகாய்-1

சீரகம்-1/4 ஸ்பூன்

இஞ்சி-1 சிறு துண்டு

பூண்டு-4

கறிவேப்பிலை-1 கொத்து

சோயா சாஸ்- 2 ஸ்பூன்

வினிகர்- 3 ஸ்பூன்

அஜினோமோட்டோ- கால் ஸ்பூன்

வெள்ளைமிளகு பொடி- 1/4 ஸ்பூன்

கொத்தமல்லி- சிறிதளவு

டொமெட்டோ சாஸ்- 2 மேசைகரண்டி

பச்சைமிளகாய் சாஸ்- 3 ஸ்பூன்

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், பொடியாய் நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்

பின் பொடியாய் நறுக்கிய இஞ்சி,பூண்டு, சேர்த்து வதக்கவும்

நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்

பின்னர் காளான் சேர்த்து வதக்கவும்.

பாதி சுருண்டதும் வினிகர்,சோயா சாஸ், டொமெட்டோ சாஸ், பச்சை மிளகாய் சாஸ், அஜினோமோட்டோ, தேவைக்கு உப்பு சேர்த்து வேகவிடவும்.

பின்னர் சாதம் கொட்டி கிளறவும்

அதில் மிளகுதூள் மற்றும் கொத்தமல்லி தூவி கிளறி பின் பரிமாறவும்

குறிப்புகள்: