காலிஃப்ளவர் சைனீஸ்
தேவையான பொருட்கள்:
சிறிய காலிப்ளவர் - ஒன்று
கார்ன்ஃப்ளார் - 3 டேபிள் ஸ்பூன்
மைதா - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - கொஞ்சம்
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கவும்)
அஜினோமோட்டோ - 1/4 ஸ்பூன்
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
ரெட் சில்லி - 3 (பொடியாக நறுக்கவும்)
வெங்காய தாள் - ஒரு கொத்து
வெங்காயம் - 1/2
சோயா சாஸ் - 3 ஸ்பூன்
செய்முறை:
காலிஃப்ளவரை பூப்பூவாக பிரித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் காலிஃப்ளவரை 2 நிமிடங்கள் வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும். இந்த தண்ணீரை கிரேவிக்கு பயன்படுத்த தனியாக எடுத்து வைக்கவும்.
மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, சிறிது சில்லி பௌடர், அஜினமோட்டோ, 1/4 ஸ்பூன் சோயா சாஸ், சிறிது பூண்டு எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி பஜ்ஜிமாவை விட சிறிது தண்ணியாக கலந்துக் கொள்ளவும்.
இந்த மாவில் காலிஃப்ளவரை நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மற்றொரு பானில் சிறிது எண்ணெய் விட்டு பூண்டு, பச்சைமிளகாய் & ரெட் சில்லி போடவும்.
பொடியாக அரிந்த வெங்காயம் & வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வாசம் போனதும் சோயா சாஸ் சேர்த்து காலிஃப்ளவர் வெந்த தண்ணி ஊற்றி கொதிக்க விடவும்.
2 ஸ்பூன் கார்ன்ஃப்ளாரை சிறிது நீரில் குழைத்து கிரேவியில் கலக்கவும்.
பரிமாறும் பொழுது பொரித்த காலிஃப்ளவர் மீது சூடான கிரேவி ஊற்றி உடனடியாக பரிமாறவும்.
இது சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.