கார்லிக் பேஸ்ட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பூண்டு - ஒரு பல்

முட்டையின் வெள்ளைக்கரு - 2

சமையல் எண்ணெய் - அரை கப்

எலுமிச்சம்பழச்சாறு - 3 தேக்கரண்டி

உப்பு - 3/4 தேக்கரண்டி

செய்முறை:

பூண்டையும், முட்டையின் வெள்ளைக் கருவையும் மிக்ஸியில் போட்டு நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். பிறகு எண்ணெயை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் அடிக்கவும்.

பிறகு உப்பும், எலுமிச்சம்பழச்சாறும் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் அடிக்கவும்.

இப்பொழுது கலவை பேஸ்ட் போல கெட்டியாகிவரும். இதனை அழகான பாத்திரத்தில் போட்டு பார்ஸ்லி இலையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்புகள்:

பொரித்த சிக்கனுக்கு, சிப்ஸுக்கு, சாண்ட்விச்சுக்கு ஏற்ற டிப்(Dip) இது. ப்ரெட்டில் இதனை தடவி, சிறிது வெண்ணெயும் தடவி தவாவில் இருபுறமும் சுட்டெடுக்க மணக்கும் கார்லிக் ப்ரெட் டோஸ்ட் தயார்.