கார்ன் மஃபின்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப் சர்க்கரை - அரை கப் கார்ன்மீல் (cornmeal) - அரை கப் பால் - 3/4 கப் வெண்ணெய் - 120 கிராம் முட்டை - ஒன்று பேக்கிங் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - 3/4 தேக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களை சரியான அளவில் எடுத்து ரெடியாக வைத்துக் கொள்ளவும். அவனை 350 டிகிரி F முற்சூடு செய்யவும். வெண்ணெயை உருக்கி ஆற வைக்கவும். முட்டை ரூம் டெம்பரேச்சரில் இருத்தல் அவசியம்.

முதலில் மாவு

சர்க்கரை

கார்ன்மீல்

பேக்கிங் பவுடர்

உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக கலந்து வைக்கவும். முட்டை

பால்

வெண்ணெய் சேர்த்து தனியே நன்கு கலந்து வைக்கவும்.

பிறகு இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் போட்டு இரண்டு நிமிடம் ஓட்டவும். மஃபின் ட்ரேயில் மஃபின் லைனர் போட்டு ரெடியாக வைக்கவும்.

கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து ஒவ்வொரு லைனரின் மேல் போடவும். முழுவதுமாக நிரப்பவும். அப்பொழுது தான் வேகும் போது எழும்பி வரும் பார்க்கவே அழகா இருக்கும்.

முற்சூடு செய்யப்பட்ட அவனில் அதிகபட்சம் முப்பது நிமிடம் வைத்து வேக விடவும். இருபது இருபத்தி ஐந்து நிமிடமான பின் ஒரு டூத் பிக் வைத்து குத்தி பார்க்கவும். ஒட்டாமல் வந்தால் வெளியில் எடுத்து ஆற விடவும். ஆறியபின் எடுத்து பரிமாறவும். சுவையான கார்ன் மஃபின் தயார்.

குறிப்புகள்: