கார்ன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மக்காச்சோளம் - இரண்டு கோப்பை

வெங்காயம் - ஒன்று

சிக்கன் ஸ்டாக்(அ) வெஜ் ஸ்டாக் - நான்கு கோப்பை

பால் - இரண்டு கோப்பை

வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

மைதா - ஒரு மேசைக்கரண்டி

உப்புத்தூள் - அரைத்தேக்கரண்டி

வெள்ளை மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

க்ரீம் - கால் கோப்பை

செய்முறை:

மக்காச்சோளம் பச்சையாக இருந்தாலும் அல்லது வேகவைத்து குளிர்விக்கப்பட்டதாக ரெடிமேடாக கிடைத்தாலும் பரவாயில்லை தேவையானதை எடுத்து கொள்ளவும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விடவும். அதில் சோளத்தைப் போட்டு வேகவிடவும்.

பிறகு ஒரு சட்டியை அடுப்பில் வைத்து வெண்ணெயை சூடாக்கி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்தவுடன் மைதாவைப் போட்டு கலக்கி விடவும். கலவை தீயாமல் பச்சை வாசனை நீங்கும் வரை கிளறி விட்டு அதில் வெந்த சோளத்தை ஸ்டாக்குடன் சேர்த்து ஊற்றி நன்கு கலக்கி விடவும்.

பிறகு அடுப்பின் அனலை குறைத்து வைத்து சூப்பை பத்து நிமிடங்களுக்கு அடுப்பிலேயே வைத்து விடவும்.

பிறகு அரவை இயந்திரத்தில் ஊற்றி தேவையான பதத்திற்கு அரைத்து ஸ்ரேய்னரில் வடிகட்டிக் கொள்ளவும்.

பிறகு வடிகட்டிய சூப்பில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சூடுப்படுத்தவும். சூப் பதமாக வந்தவுடன் உப்பு, மிளகுத்தூளை போட்டு நன்கு கலக்கி இறக்கி விடவும்.

பரிமாறும் பொழுது மிதமான சூட்டுடன், க்ரீமை மேலாக ஊற்றி சிறிது வெந்த சோளத்தையும் போட்டு அலங்காரமாக பரிமாறவும்.

குறிப்புகள்: