கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ளைன் கார்ன் ஃப்ளேக்ஸ் - ஒரு கப் (குவியலாக) ஹனி - 3 மேசைக்கரண்டி பட்டர் - 30 கிராம் ட்ரை ஃப்ரூட்ஸ் - 2 மேசைக்கரண்டி வால்நட் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். கார்ன் ஃப்ளேக்ஸ் பெரிய துண்டுகளாக இருந்தால். கையால் லேசாக நொறுக்கிக் கொள்ளவும். நட்ஸையும்

ட்ரை ஃப்ரூட்ஸையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஓவனை 180 டிகிரியில் முற்சூடு செய்யவும்.

அடுப்பில் நாண் ஸ்டிக் தவாவை வைத்து

அதில் பட்டரைப் போட்டு உருக்கவும்.

பட்டர் உருகியதும் ஹனியைச் சேர்த்து

அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும். பட்டரையும்

ஹனியையும் சேர்த்துக் கலக்கும் போது

அந்த கேரமல் நுரைத்து வெண்மையாக வரும்.

நுரைத்து வரும் போது கார்ன் ஃப்ளேக்ஸைச் சேர்த்து நன்கு ஒன்று சேரக் கலந்துவிடவும். நிறம் மாறாமல்

ஒரு வாசம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு

நறுக்கிய நட்ஸ் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸைச் சேர்த்துப் பிரட்டவும்.

கப் கேக் ட்ரேயில் கப் பேப்பரை வைத்து

ஒவ்வொரு கப்பிலும் ஒன்றரை மேசைக்கரண்டி அளவு ஃப்ளேக்ஸ் மிக்ஸைப் போட்டு முற்சூடு செய்த ஓவனில் 9 நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய

சுவையான

சத்தான கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் தயார். குழந்தைகளின் ஸ்நாக்ஸ் பாக்ஸிற்கு கொடுத்தனுப்ப ஏதுவானதாக இருக்கும்.

ஆறிய பிறகு தான் க்ரிஸ்பியாக இருக்கும். அதை டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைத்தால் இரண்டு வாரங்கள் ஆனாலும் வீணாகாமல் அப்படியே இருக்கும். மிகவும் சுவையாகவும் இருக்கும்.

குறிப்புகள்: