காராமணி வடை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காராமணி - 500 கிராம் வெங்காயம் - 50 கிராம் மிளகாய் வற்றல் - நான்கு கறிவேப்பிலை - 2 கொத்து உப்பு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காராமணியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். வெங்காயம்

மிளகாய் வற்றல்

கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த காராமணியை மிக்ஸியில் போட்டு பருப்பு உடையும் அளவிற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு விழுதாக அரைக்க தேவையில்லை. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்

கறிவேப்பிலை

மிளகாய் வற்றல் மற்றும் உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும். கலந்த பின்னர் உப்பின் அளவை சரிபார்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறிய உருண்டைகளாக எடுத்து தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். வடையின் உள் பகுதி நன்கு வேக தீயின் அளவை குறைத்து வைத்து அதிக நேரம் வேக வைக்கவும்.

சுலபமாக செய்யக் கூடிய சுவையான காராமணி வடை தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் இந்த செய்முறையை வழங்கியுள்ளார்.

குறிப்புகள்: