காரட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரட் - 380 கிராம் (தோல் சீவிய பின்பு 380 கிராம் இருக்க வேண்டும்)

ப்ரெளன் சுகர் - 300 கிராம்

முட்டை - 4

மைதா - 300 கிராம்

ராப்ஸ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 200 மி.லி

கறுவாத்தூள் - 2 தேக்கரண்டி

ஆப்பச்சோடா - 1 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

காரட்டை துருவிக் கொள்ளவும்.

மைதாவுடன், பேக்கிங் பவுடர், ஆப்பச்சோடா சேர்த்து 4 முறை சலித்துக்கொள்ளவும்.

சீனி முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அக்கலவைக்குள் ராப்ஸ் எண்ணெய், மைதா கலவை, கறுவாத்தூள் சேர்த்து அடிக்கவும்.

பின்பு துருவிய காரட்டை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

பின்பு கேக் ரேயில் ஊற்றி 30 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்.

நன்கு ஆறியதும் அளவான துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

குறிப்புகள்:

டயட்லில் இருப்பவருக்கு இக் கேக் மிகவும் உகந்தது. ஏனெனில் இதில் ப்ரெளன் சுகரும், ராப்ஸ் எண்ணெய் சேர்ப்பதலால் கொழுப்பு சத்து மிகவும் குறைவாக உள்ளது.

காரட்டை துருவியில் உள்ள சின்ன கண்ணில் துருவிக் கொள்ளவும். துருவிய காரட்டை சேர்த்து கலக்கவும், அடிக்க கூடாது.