காய்கறி ரொட்டி
தேவையான பொருட்கள்:
கோதுமைமா (மைதாமா) - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
பால் - ஒரு மேசைக்கரண்டி
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
கொதிநீர்- (1- 2) கப்
எண்ணெய் - தேவையான அளவு
பெரிய வெங்காயம் (சிறிது சிறிதாக வெட்டியது) - ஒன்று
பச்சைமிளகாய் (சிறிய வட்டமாக வெட்டியது) - 3
கறிவேப்பிலை (சிறிது சிறிதாக வெட்டியது) - சிறிதளவு
லீக்ஸ் (சிறிய மெல்லிய வட்டமாக வெட்டியது) - 25கிராம்
கேரட் (துருவியது) - 25கிராம்
பீன்ஸ் (சிறிய மெல்லிய வட்டமாக வெட்டியது) - 25 கிராம்
முட்டைகோஸ் (சிறிது சிறிதாக வெட்டியது) - 15 கிராம்
தக்காளிப்பழம் (சிறியது) (சிறிது சிறிதாக வெட்டியது) - ஒன்று
உருளைக்கிழங்கு (துருவியது) - ஒன்று
செய்முறை:
கோதுமைமா, உப்பு, பால், பட்டர், வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, லீக்ஸ், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், தக்காளிப்பழம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை போட்டு கலக்கவும்.
அதன் பின்பு கொதிநீர் விட்டு நன்றாக குழைக்கவும். குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும். சிறு உருண்டைகளில் ஒன்றை எடுத்து வட்டமாக தட்டவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும் அதில் கொஞ்சமாக எண்ணெய் தடவவும். அதன் பின்பு வட்டமாக தட்டிய மாவினை போட்டு வேகவிடவும்.
அது வெந்ததும் அதனை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவிடவும்.
இருபக்கமும் வெந்ததும் சுவையான, மென்மையான ரொட்டி தயராகி விடும்.
இதனைப்போல மற்றைய ரொட்டிகளையும் தயார் செய்து பரிமாறவும் .
குறிப்புகள்:
காய்கறி ரொட்டி எல்லோராலும் விரும்பி உண்ண கூடியதும் சுவையானதும், கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், மினரல், உயிர்சத்துகள் நிறைந்ததும் ஆன ஓரு உணவு(சிறுவர்களுக்கு மிகமிக நல்ல சத்தான உணவு). 1)எச்சரிக்கை - இருதய, சர்க்கரை நோயாளிகள் வைத்தியரின் ஆலோசனைப்படி சாப்பிடவும். (2)மாற்று முறை
-கொழுப்புபட்டருக்கு பதிலாக கொழுப்பு குறைந்த பட்டரோ அல்லது எண்ணெய் பாவிக்கலாம். பால்க்கு பதிலாக தயிர் பாவிக்கலாம். விரும்பினால் முட்டை- 1ஜ சேர்க்கலாம். காய்கறிகளில் விரும்பியதை பாவிக்கலாம். (3)கவனிக்க வேண்டிய விஷயங்கள - ரொட்டி நன்றாக வெந்துவிட்டதா என்பதை கவனிக்கவும். ஒரளவு மிதமான தீயில் வேகவிடவும். பால் பட்டர், முட்டை ஆகியவற்றை சேர்த்து செய்த ரொட்டி மென்மையாக இருக்கும்.