காக்டெயில் ஜீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - ஒன்று

ஆப்பிள் - ஒன்று

கொய்யா - இரண்டு

சப்போட்டா - இரண்டு

ஸ்ட்ராபெரி - நான்கு

மாம்பழம் - ஒன்று

பைனாப்பிள் - எசன்ஸ் இரண்டு துளி

சர்க்கரை - அரை கப்

பால் - இரண்டு டம்ளர்

ஐஸ் கியூப்ஸ் - ஆறு, ஏழு

செய்முறை:

எல்லா பழங்களையும் நன்றாக கழுவி தோலை நீக்கி விடவும்.

மிக்ஸியில் கொய்யா பழத்தை தவிர மற்ற அனைத்து பழங்களையும் போட்டு அதனுடன் பால், தண்ணீர், ஐஸ் கியூப், சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

கொய்யாப்பழத்தை மட்டும் தனியாக தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சேர்க்கவும். ஏனென்றால் கொய்யா பழத்தில் விதைகள் இருக்கும். கடைசியில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கி ஜூஸ் டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.

குறிப்புகள்: